இதோட முடிச்சுக்கணும்..! மீறினால் 2 வருடம் சிறை.! தேர்தல் ஆணையம் அதிரடி.!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டமன்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியின் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 7 மணி முதல் தேர்தல் நாளான ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவுகள் முழுவதுமாக முடிவடையும் வரையில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 4ம் தேதிக்கு பின்னர், தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலங்களையோ எந்த கட்சியினரும் நடத்த கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி, இணையதளம் மூலமாக அரசியல் கட்சியினர், பொது மக்களின் பார்வைக்கு கொண்டு விளம்பரங்களைக் கொண்டு செல்லக்கூடாது.
இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. அதன் மூலமாக பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது. இதனை யார் மீறினாலும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.