உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தப்பட்ட மறைமுகத் தேர்தல் தேதி அறிவிப்பு!
Election date announced
நிறுத்தப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கு ஜனவரி 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11-ல் நடைபெற்றது.
சில ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், மற்றும் ஊராட்சி மன்றங்களின் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராதது, அசாதாரண சூழல் காரணமாக பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பதவிக்கான மறைமுகத் தேர்தல் இந்த மாதம் ஜனவரி 30-ல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் சுப்பிரமணியன் அரசாணை வெளியிட்டுள்ளார்.