விவசாய நிலத்தின் அருகே வந்த மோசமான துர்நாற்றம்! குழப்பத்தில் தோண்டிய அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
elephant buried in land by farmar
குடியாத்தம் அருகே மத்தேட்டிப்பள்ளி என்ற இடத்தில பிச்சாண்டி என்ற நபர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். அப்பகுதி வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அங்கு அடிக்கடி யானைகள் வந்து பயிர்களை அழிப்பது தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து இதுபோன்று நடக்காமல் தடுக்க எண்ணி பிச்சாண்டி தன் நிலத்தை சுற்றிலும் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானை ஒன்று பிச்சாண்டியின் நிலத்திற்குள் நுழைய முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்துள்ளது.
இந்நிலையில் அங்கு வந்த பிச்சாண்டி இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரிய வந்தால் அவர்கள் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த அவர் அசோக் குமார் என்பவரின் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து ராட்சத பள்ளம் ஒன்றை தோண்டி,அதில் மின்சாரம் தாக்கி இறந்த யானையை பொக்லைன் எந்திரம் மூலம் அந்த குழிக்குள் தள்ளி புதைத்துள்ளார்.
ஆனால் இது குறித்த தகவல் பரவிய நிலையில் கலெக்டர் சண்முகசுந்தரதிற்கு இது தெரியவந்துள்ளது. பின்னர் வனத்துறையினருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் பிச்சாண்டி நிலத்தில் ஒரு பகுதியில் மற்றும் புதிதாக மண் தோண்டி மூடப்பட்டிருந்தது.மேலும் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசிய நிலையில் தோண்டப்பட்டுள்ளது. அங்கு யானை புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்து அனைவரும் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் யானையின் சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தடயங்களை சேகரித்தபின் பள்ளத்தில் இறக்கி அடக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார்கள் தப்பியோடிய பிச்சாண்டியை தேடி வருகின்றனர்.