அரசு கொடுத்த அதிரடி சலுகை.! ஆகஸ்டு 27-தான் கடைசி தேதி.! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.!
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கலாம் என்று அரசுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பரிந்துரைத்துள்ளார்.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பகங்களில் 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் (1-1-2017 முதல் 31-12-2019 வரை) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, வருகிற ஆகஸ்டு 27 ஆம் தேதிக்குள், http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். ஆன்-லைன் மூலமாக புதுப்பிக்க முடியாதவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.