"அச்சோ பாவமே..." குடும்ப பிரச்சினை மற்றும் வேலையில்லாத விரக்தி... பரிதாபமாக பறிபோன இளைஞரின் உயிர்.!
அச்சோ பாவமே... குடும்ப பிரச்சினை மற்றும் வேலையில்லாத விரக்தி... பரிதாபமாக பறிபோன இளைஞரின் உயிர்.!
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.