என்னம்மா யோசிக்கிறாங்க! தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட திருமண அழைப்பிதழ்! பிரித்துபார்த்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி!
epetrin power smuggling in marriage invitation
கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு மதுரையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் முகவரியில் இருந்து பார்சல் வந்துள்ளது. மேலும் அந்த பார்சல் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கான முகவரியும் இடம்பெற்றிருந்துள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பார்சலை சோதனை செய்தபோது, பார்சலின் உள்ளே திருமண அழைப்பிதழ்கள் இருந்துள்ளது. ஆனால் அதனை ஸ்கேன் செய்து பார்த்தபோது ஏதோ துகள்கள் இருப்பதைப் போன்று காட்டியுள்ளது.
இந்நிலையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்த நிலையில் திருமண அழைப்பிதழின் இரண்டு பக்கத்தில் உள்ள அட்டைகளை கிழித்து உள்ளே பார்த்துள்ளனர். அதில் சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டில் வெள்ளை நிற பவுடர் நிரப்பி இருந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் அது எபெட்ரின் என்னும் போதைப் பொருள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சட்ட விரோதமான இந்த செயல் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் திருமண அழைப்பிதல் அட்டையில் சிறிய பிளாஸ்டிக் கவரில் மறைத்துவைத்து, 43 அழைப்பிதழ் அட்டைகளில் 86 பாக்கெட்டுகள் இருந்துள்ளது. இவை சுமார் ஐந்து கோடி மதிப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அழைப்பிதழை வடிவமைத்த அச்சகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.