ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம்? - இறுதி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம்? - இறுதி நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதி நாள் ஆகும்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிக்கிறது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.
அதேபோல, 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்தே பணிகள் நடைபெறுகிறது என்பதால், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உள்ளாட்சி உட்பட எந்த தேர்தலிலும் பங்கேற்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில்.!
இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை
ஜனநாயகத்திற்கு எதிரான பல விஷயங்கள் இடைத்தேர்தலில் நடைபெறும். இதன் வாயிலாக ஆளும் கட்சி வெற்றி அடையும். இதுவே இடைத்தேர்தலில் நடந்து வருகிறது என்பதால், இத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி, இடைத்தேர்தல் வாயிலாக திமுகவுக்கு கொடுக்கப்பட்டு, திமுக எம்.எல்.ஏ வேட்பாளராக சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உட்பட பிற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துவிட்டது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில்.!