8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை., பேரம் பேசிய துணை வேந்தர்?.. பெரியார் பல்கலை., பாலியல் தொல்லை விவகாரத்தில் பகீர்.!
8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை., பேரம் பேசிய துணை வேந்தர்?.. பெரியார் பல்கலை., பாலியல் தொல்லை விவகாரத்தில் பகீர்.!
கருப்பூர் பெரியார் பல்கலை.,யில் பேராசிரியர் கோபி பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் ஏற்கனவே 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. துணைவேந்தர் பணம் வாங்கி பிரச்சனையை மூடி மறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலை.,யில் வேதிதியால் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோபி (வயது 47). சேலத்தில் உள்ள சித்தனூரில் தங்கியிருந்து பணியாற்றி வரும் கோபி, கடந்த மே மாதம் 13 ஆம் தேதி முதல் பல்கலை.,யில் பொறுப்பு பதிவாளராக நியமனமும் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கென பல்கலை., ஊழியர்கள் குடியிருப்பில் அறை உள்ளது. அங்கு தங்கியிருந்து பணியாற்றுகிறார். இந்நிலையில், சேலம் சிவதாபுரம் பகுதியில் வசித்து வரும் 27 வயது கல்லூரி மாணவி தனது ஆராய்ச்சி படிப்புக்காக கோபியிடம் பயின்று வந்துள்ளார். சம்பவத்தன்று, பல்கலை., விடுதிக்கு மாணவியை நேரில் அழைத்த கோபி, அவசரமாக ஆராய்ச்சி தொடர்பாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோபியின் பேச்சில் சந்தேகம் கொண்ட பெண்மணி தன்னுடன் சில உறவினர்களை அழைத்துச்செல்ல, கோபியின் வீட்டிற்கு வெளியே அவர்கள் இருந்துள்ளனர். மாணவி கோபியை சந்திக்க சென்ற சமயத்தில், அவர் மாணவியிடம் சில்மிசத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பதறிப்போன மாணவி சத்தமிட்டவாறு வெளியே வர, நிலைமையை சுதாரித்த உறவினர்கள் கோபியிடம் சண்டையிட்டுள்ளனர்.
அவர் பெண்ணின் உறவினர்களை தரக்குறைவாக பேச, ஆத்திரமடைந்தவர்கள் கோபியை அடித்து நொறுக்கியெடுத்தனர். படுகாயத்துடன் துடித்த கோபி சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் கோபியை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோபியும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்க, அதன் பேரில் மாணவியின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், கோபி 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் அம்பலமானது.
7 மாணவிகள் தரப்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு இருந்த சமயத்தில், துணைவேந்தர் பணம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்க விடாமல் தப்பவிட்டதாகவும் தெரியவருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை சொந்த ஊராக கொண்ட கோபிக்கு கவிதா என்ற மனைவி இருக்கிறார். இவர் திருவாரூர் மத்திய பல்கலை.,யில் பேராசிரியராக பணியாற்றுகிறார். தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.