முகம் பார்க்காமல் மலர்ந்த காதல்! விமானத்தில் வந்து இறங்கிய காதலியை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த காதலன்!
Facebook love boy cheated by 42 years old women
தேனி மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரும், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டு மலேசியாவில் வசித்துவரும் அமுதேஸ்வரி என்ற பெண்ணிற்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அமுதேஸ்வரி அசோக்குமாரிடம் கேட்டுள்ளார்.
அமுதேஸ்வரி மீது காதலில் விழுந்த அசோக்கும் நேரில் பார்க்காமல் எப்படி திருமணம் செய்துகொள்வது? எனவே, நேரில் வருமாறு அமுதேஸ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் தனது காதலனை பார்க்க விமானத்தில் பறந்துவந்துள்ளார் அமுதேஸ்வரி.
தனது காதலியை பார்க்க ஆசையோடு அசோக்குமார் விமானம் நிலையம் சென்றுள்ளார். அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமுதேஸ்வரி ஒரு இளம் பெண் என நினைத்திருந்த நிலையில் அவருக்கு 42 வயது என்பது தெரிந்ததும் அசோக்குமார் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அமுதேஸ்வரி அசோக்கை பழிவாங்க திட்டமிட்டு தனது சகோதரியை அசோக் கொலை செய்துவிட்டதாகவும், அவரை பழிக்கு பழிவாங்க அவரை கொலை செய்யவேண்டும் என கூலிப்படையை தயார் செய்துள்ளார். இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவர கூலிப்படையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், அசோக்குமார், அமுதேஸ்வரி இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.