தமிழகத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்.. ஒரே நாளில் 7 போலி மருத்துவர்களை பொறிவைத்து பிடித்த காவல்துறையினர்..!
தமிழகத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்.. ஒரே நாளில் 7 போலி மருத்துவர்களை பொறிவைத்து வைத்துப் பிடித்த காவல்துறையினர்..!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் சிலர் பாதிக்கப்பட்டும் மேலும் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் போலி மருத்துவர்கள் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை கைது செய்யுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது உத்தரவின் படி நடைபெற்ற சோதனையில் கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு பகுதியை சேர்ந்த குணசேகர், புதுநகரை சேர்ந்த மதியழகன், கொய்யாதோப்பு தெருவை சேர்ந்த காந்தரூபன், கரும்பூரை சேர்ந்த சத்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேலச்சேரி கிராமத்தில் இதேபோன்று மெடிக்கல் வைத்து நோயாளிகளுக்கு போலி மருத்துவம் பார்த்து வந்த மனோகர் என்பவரையும், சேலம் மாவட்டம் சங்கரி அடுத்து வி.என் பாளையம் பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜன் ஆகியோரையும் போலி மருத்துவம் பார்த்ததாக அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் போலி மருத்துவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.