சாலையோரத்தில் சிறுமியுடன் சடலமாக கிடந்த நபர்.! வெளியான அதிரவைக்கும் பின்னணி!!
father commits suicide with daughter
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, தோப்பூர் 4 வழி சாலையின் ஓரத்தில் பள்ளம் ஒன்றில் நபர் ஒருவரும், சிறுமியும் சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர்களுக்கு பக்கத்தில் களைக்கொல்லிக்கு பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில் ஒன்றும் கிடந்துள்ளது.
இந்நிலையில் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த, அவ்வழியே சென்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி ஒருவர் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்தவரின் பாக்கெட்டில் கிடைத்த ஓட்டுநர் உரிமம் மூலம் போலீசார் உயிரிழந்தவர்கள் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிருபாகரன் மற்றும் அவரது மகள் ஜூலியா என அடையாளம் கண்டு கொண்டனர்.
இதனை தொடர்ந்து அவரது உறவினர்களுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கிருபாகரனை அவரது மனைவி விவாகரத்து செய்ததாலேயே அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.