×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முருங்கை மரம் தன் வீட்டில் உரசியதால் மருமகளை கொலைசெய்த மாமனார்.! பரபரப்பு சம்பவம்..!

Father in law killed daughter in law for drumstick tree

Advertisement

திருவள்ளூர்  மாவட்டம் திருமணம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் மற்றும் கலைவாணி தம்பதியர். செந்தில்குமார் வீட்டுக்கு அருகில் அவரது சித்தப்பா ராமன்(50) என்பவர் வசித்துவந்துள்ளார். செந்தில்குமார் - ராமன் இருவருக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செந்தில்குமாரின் வீட்டில் வளர்ந்துவரும் முருங்கைமரம் ஓன்று தன் வீட்டில் உரசுவதாகக் கூறி நேற்று மாலை, ராமன் செந்திலின் வீட்டுக்கு சண்டையிடுவதற்காக சென்றுள்ளார். வீட்டில் செந்திலின் மனைவி கலைவாணி மட்டும் தனியாக இருந்துள்ளார். ராமன் - கலைவாணி இடையே முருங்கைமரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ராமன் தனது மருமகள் கலைவாணியை பலமுறை குத்தியுள்ளார். கலைவாணியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதமாக உயிர் இழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ராமனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஒரு முருங்கை மாற்றத்திற்காக கொலை வரை சென்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story