எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 45 குழந்தைகளுக்கு தந்தை!
Father of 45 children affected by AIDS
உலகளவில் மருத்துவத்துக்கு சவால் விடும் நோய்களில் எய்ட்ஸ் நோயும் ஒன்று. பால்வினை நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. இந்நோய் கிருமிகளை அழிக்க தற்போதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
எய்ட்ஸ் நோய் தாக்கிய ஒருவரை தொடுவதாலோ, அவருடன் நெருங்கி பழகுவதாலோ, அவரின் உடைகளை உடுத்துவதாலோ, அவர்கள் பயன்படுத்திய கழிவறையை பிறர் பயன்படுத்தும் போதோ எய்ட்ஸ் நோய் பரவாது. அதனால் எய்ட்ஸ் நோயாளிகளுடன் பயமின்றி பழகலாம். மேலும் அவர்களை அலட்சியப்படுத்தாமல், அன்பு காட்டி, ஆதரவு கொடுக்க வேண்டும்.
இந்தநிலையில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் சாலமன் ராஜ் என்பவர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 45 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், மற்றவர்களுடைய தவறினால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள் இவர்கள். இந்த 45 குழந்தைகளுக்கும் நான் அப்பா என்பது மகிழ்ச்சியளித்துள்ளது என கூறியுள்ளார்.
இந்த 45 குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதே எனது மிகப்பெரிய பொறுப்பு என கூறியுள்ளார். சாலமன் ராஜாவின் இந்த செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.