பள்ளியில் இருந்த்து வீடு திரும்பிய சிறுமிகளை, போதையில் இருந்த தந்தை செய்த கொடூரச்செயல்!
father thorowed his daughters in river
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் லாவண்யா மற்றும் ஸ்ரீமதி இரண்டு பெண் சிறுமிகள் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த நிலையில் இருவரையும் அவரது தந்தை பள்ளியிலிருந்து அழைத்து வந்துள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த இவர் இரண்டு சிறுமிகளையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் அருகில் இருந்த ஆற்றில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். ஆற்றில் சிறுமிகள் தத்தளித்து கூச்சலிட்டதை பார்த்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது, அந்த சிறுமி கூறுகையில், தன்னையும் தனது தங்கை ஸ்ரீ மதியையும் எனது தந்தை கோபத்தில் ஆற்றில் தூக்கி வீசிவிட்டார் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். சிறுமிகளின் குமுறல் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.