முதல் மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்.!
final-semester-exams-mandatory-first-and-second-year-exams-as-per-university-decisions
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கவும், முககவசம் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களை தவிர முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர்ஸ் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது முதல் மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் யுஜிசி தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலாம், இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.