ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய மாணவன்... பெற்றோரிடம் போட்டுக் கொடுத்த நிறுவனம்... மாணவன் எடுத்த விபரீத முடிவு.!
ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய மாணவன்... பெற்றோரிடம் போட்டுக் கொடுத்த நிறுவனம்... மாணவன் எடுத்த விபரீத முடிவு.!
நாமக்கல் பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவன் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கீழ் காலனியை சேர்ந்தவர் லோகேஷ்வரன்(22). இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் ஆன்லைன் செயலி மூலம் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக தெரிகிறது.
தவணை தொகை செலுத்துவதற்கான தேதி முடிந்தும் அவர் தவணை செலுத்தாமல் இருந்திருக்கிறார் இதனால் அவரை தொடர்பு கொண்டு உள்ளனர். அப்போதும் அவர் சரியாக பதிலளிக்காததால் ஆன்லைன் நிறுவனம் அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளது.
இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவர் லோகேஸ்வரன் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். சம்பவம் அறிந்து நாமக்கல் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.