பட்டாசுக்கடையில் பயங்கர தீ விபத்து..!! பலர் கவலைக்கிடம் ..!!
பட்டாசுக்கடையில் பயங்கர தீ விபத்து..!! அருகிலிருந்த ஹோட்டலில் வெடித்த சிலிண்டர்.! பலர் கவலைக்கிடம் ..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் செல்வகணபதி. இவர் தீபாவளி பண்டிகையையொட்டி, தனது மளிகை கடையுடன் சேர்த்து பட்டாசுகளையும் வைத்து விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு திடீரென எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது.
இதில் கடை முழுவதும் பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசுகள் அருகிலிருந்த பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடைகளில் சிதறியதால் அங்கிருந்த நான்கு சிலிண்டர்களும் வெடித்தது.இந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 9 பேர் பலத்த தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமணையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் ,இதில் நாசர் என்பவர் இன்று காலை உயிரிழந்தார்.