ஊரே முடங்கி கிடக்கும் நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்விடுதி அருகே, சூடு பிடித்த மீன் வியாபாரம்!
Fish sale
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், இன்று அத்தியாவசிய பொருட்களை தவிர, அணைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில், இன்று அனைவரும் ஊருக்குள்ளே முடங்கியிருக்கும் நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி கிராமத்தில் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுகூடி மீன் வாங்குவதற்கு முட்டி மோதியுள்ளனர்.
தமிழகத்தில், அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பாப்பான்விடுதி கிராமம் மனக்கொள்ளை அருகே மீன் பிடித்து விற்றுள்ளனர். இதனை பார்த்த பாப்பான்விடுதி தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீன் விற்பனையை தடுத்து விரட்டியுள்ளனர். அங்கு சிறு குழந்தைகளும் இருந்துள்ளனர். அவர்களை மீட்டு வீட்டிற்கு அனுப்பிவைத்து தன்னார்வலர்கள் எச்சரித்துள்ளனர்.