×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிகாலையில் மீன்பிடிக்க வலையை வீசிய மீனவர்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

fisherman died in sea

Advertisement


மீன் பிடி தொழில் என்பது அனைவரும் எளிதான தொழில் என நினைப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு மீனவர்களும் தங்களது உயிர்களை பணயம்வைத்து தான் கடலுக்குச் செல்கின்றனர். மீன் பிடித்துவந்து, வலையில் சிக்கிய மீனை விற்று தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.

ஒரு சில மீனவர்கள் பெரிய படகில் மீன் பிடிக்கச்சென்றால், திரும்பி வருவதற்கு இரண்டு, மூன்று நாட்கள் கூட ஆகும். அப்போது அவர்கள் சாப்பாட்டுக்காக பயன்படுத்துவது பழைய சாதம், வத்தல் போன்ற உணவுதான். குளிரிலும், வெயிலிலும் கடலிலே வாழ்க்கையை பயணிக்கின்றனர்.

இந்தநிலையில், கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்த பரசுராமன் என்ற மீனவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் துடுப்பு படகில் தனியாக மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அவர் கடலுக்குள், படகில் நின்றவாறு மீன்பிடிக்க கடலில் வலையை வீசியுள்ளார்.

அப்போது திடீரென கால் தவறி கடலுக்குள் விழுந்து தண்ணீரில்தத்தளித்துள்ளார். நீண்ட நேரம் நீச்சலில் சமாளிக்கமுடியாமல் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், படகு மட்டும் தனியே மிதப்பதை அருகே இருந்த மீனவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து படகு அருகே விரைந்துவந்து, அருகில் இருந்த வலையை இழுத்து பார்த்த போது, பரசுராமன் வலைக்குள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, பரசுராமனின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர் மீனவர்கள். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பரசுராமனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fisher man #boat #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story