உணவு டெலிவரி செய்யபோன இடத்தில் அத்துமீறிய நபர்.! இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்.! அதிர்ச்சி சம்பவம்!!
உணவு டெலிவரி செய்யபோன இடத்தில் அத்துமீறிய நபர்.! இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஷாக்.! அதிர்ச்சி சம்பவம்!!
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் 24 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர் அண்மையில் ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஒருவர் ஆர்டர் செய்த உணவு பார்சலை வழங்க அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
மேலும் அப்பொழுது அந்த இளம்பெண் வீட்டில் தனியாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் அந்த உணவு டெலிவரி ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கபட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து உணவு டெலிவரி செய்த அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: என் ஆசைக்கு இணங்கு.! இல்லைனா.. அந்த வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய காவலாளி!!
உணவு டெலிவரி ஊழியர் கைது
விசாரணையில் அந்த நபர் சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த 48வயது நிறைந்த ரவிக்குமார் என்பதும், அவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் உணவு டெலிவரி ஊழியர் ரவிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: என் ஆசைக்கு இணங்கு.! இல்லைனா.. அந்த வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய காவலாளி!!