கட்டாயப் படுத்திய பெற்றோர்...!! நீட் தேர்வு பயத்தால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி...!!
கட்டாயப் படுத்திய பெற்றோர்...!! நீட் தேர்வு பயத்தால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி...!!
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசிப்பவர் உத்தராபதி. இவர் என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். மகளை மருத்துவம் படிக்க வைக்க ஆசைப்பட்டார் உத்தராபதி. இந்த நிலையில் கடந்த வருடம் பிளஸ் டூ முடித்த அவரது மகள் 399 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் சரியான மதிப்பெண் எடுக்காததால் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.
இதை தொடர்ந்து அவரது பெற்றோர், அவரை எப்படியாவது மருத்துவ படிப்பில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் கோச்சிங் சென்டர் ஒன்றில் சேர்த்துள்ளனர். இந்திரா நகரில் இயங்கி வந்த ஆகாஷ் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்த அந்த பெண் வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வு எழுதுவதற்குத் தயாராகி வந்தார். இந்நிலையில் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வுகளில் அந்த பெண் நல்ல மதிப்பெண் எடுக்காததால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக என்று கூறப்படுகின்றது
கடந்த புதன்கிழமை நீட் பயிற்சி வகுப்பு இல்லாத போதும், வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு நெய்வேலியிலிருந்து பேருந்து மூலம் வடலூருக்குச் சென்ற அந்த பெண், வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் இறங்கி பெங்களூரிலிருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவலர்கள் அவரது உடலைக் மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.