தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திராணியில்லாத திமுக அரசு., கஞ்சா பூ கண்ணால பாட்டு தேவையா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.!

திராணியில்லாத திமுக அரசு., கஞ்சா பூ கண்ணால பாட்டு தேவையா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.!

former-minister-jayakumar-troll-tn-govt-about-ganja-sal Advertisement

கஞ்சா விற்பனைக்கு எதிராக காவல்துறை பலமுயற்சி எடுத்து வரும் நிலையில், கஞ்சா பூ கண்களால் என்ற பாடலை மேற்கோள்காட்டி தமிழக அரசை முன்னாள் அமைச்சர் விமர்சித்துள்ளார். 

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டையை நடத்தியது. இதன் மூலமாக கஞ்சா விற்பனை மற்றும் அது தொடர்பான சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனாலும் பல்வேறு இடங்களில் புதுவிதமான கஞ்சா விற்பனை தொடர்கிறது.

சமீபத்தில் வெளியான கார்த்திக்கின் விருமன் திரைப்படத்தில் கஞ்சா பூ கண்ணால் என்ற பாடல் வாரியானது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்ல ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. 

அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற" என்று தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டுக்கு கலவையான விமர்சனம் கிடைக்கின்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jayakumar #AIADMK #dmk #Tn govt #Ganja Sales #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story