வேகமெடுக்கும் கொரோனா.! தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு.! வெளியே சுற்றினால் அவ்ளோ தான்.! காவல்துறை எச்சரிக்கை.!
தற்போது கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும், கொரோனா
தற்போது கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா பரவ தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் உள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. அது தவிர வரும் திங்கட்கிழமை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் தொடங்கும் முழு ஊரடங்கு நாளை முழுவதும் அமலில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.
இந்த முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், மருத்துவம் போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.