கொரோனாவால் இறந்தார் என்பதை மறைத்து வீட்டில் நடந்த இறுதிச்சடங்கு.! அதன்பின் காத்திருந்த பேரதிர்ச்சி.!
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ராமசாமி மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு ராமசாமிக்கும், அவரது மனைவி பிச்சை அம்மாளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ராமசாமி காலமானார்.
இதனையடுத்து ராமசாமியின் உடலை அவரது மகன் முருகானந்தம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி பிச்சையம்மாள் இருவரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து ராமசாமி, கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்று கூறி உண்மையை மறைத்து காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை 12 மணி நேரம் கொரோனாவால் உயிரிழந்த ராமசாமியின் உடலை வீட்டில் வைத்து உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்களை அழைத்து இறுதி சடங்குகளை செய்து ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
இதனையடுத்து ராமசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார் என தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அனைவரும் ராமசாமி வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவரது குடும்பத்தினர் உண்மையை தெரிவித்துள்ளனர். இதனால் ராமசாமியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததை யாருக்கும் சொல்லாமல் மறைந்த ராமசாமியின் மனைவி பிச்சையம்மாள், மகன் முருகானந்தம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.