×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கஜா புயலில் சிக்கிய வேளாங்கண்ணி! சேதமடைந்த ஆலய கோபுரம் மற்றும் சிலைகள்!

Gaja damaged Velankanni

Advertisement

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை - வேதாரண்யம் இடையே காலை கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் நாகை மாவட்டத்தில் 111 கி.மீ வீசிய புயலில் அனைத்து மரங்களும், மின் கம்பங்களும் முறிந்தன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து வீடுகளின் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கூரை வீடுகள் அனைத்தும் காற்றில் பறந்தன. 

இந்த கஜா புயல் ஏழை, பணக்காரன், ஜாதி மத வேறுபாடின்றி அனைவரையும் பெரிதும் பாதித்துள்ளது.

இதற்கு வழிபாட்டு தளங்களும் விதிவில்கல்ல. நாகை மாவட்டத்தில் பல இந்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. 

குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயமும், வெளியில் நிறுவப்பட்டுள்ள சிலைகளும் புயலால் சேதமடைந்துள்ளன. பேராலயத்தில் உள்ள ஒரு கோபரத்தின் பகுதி இடிந்து விழுந்துள்ளது. 

மேலும் வேளாங்கண்ணி கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளின் கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. 

சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் பேராலய நிர்வாகம் இறங்கியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gaja damaged Velankanni #Velankanni basilica #Gaja cyclone
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story