உதயநிதி மகன் இன்பநிதியின் புகைப்படத்தை கசியவிட்டது இவர்கள் தான்.! காயத்திரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு.!
உதயநிதி மகன் இன்பநிதியின் புகைப்படத்தை கசியவிட்டது இவர்கள் தான்.! காயத்திரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு.!
பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி, 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்வதாக கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் காயத்ரி ரகுராம் கூறுகையில், கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்கிறேன். இடைநீக்கத்துடன் தேசத்துக்காக உழைப்பேன் என தெரிவித்திருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக பா.ஜ.க.வின் தலைமை மீது காயத்ரி ரகுராம் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் திடீரென அறிவித்தார்.
இந்தநிலையில், காய்த்திரி ரகுராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர்களை திட்டுவதும், மிரட்டுவதும் உங்கள் விரக்தியை காட்டுகிறது. அண்ணாமலை பத்திரிகையாளர்களை அவமதித்ததற்காக கண்டிக்கிறேன். தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.