மாமியார் கூறிய ஒத்த வார்த்தை! தூங்கி எழுந்த குழந்தைகளுக்கு கண்முன்னே காத்திருந்த பேரதிர்ச்சி!
Girl commits suicide for problem with husband family
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவரது மகள் அஸ்வினி. இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிவகிரியை சேர்ந்த அருணாசலம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் அஸ்வினி கணவர் அருணாசலத்தின் தாய் மற்றும் தந்தை இருவரும் மோசமாக கொடுமைப்படுத்தியதால் கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டில் வந்து இருந்துள்ளார். இருவரையும் சேர்த்து வைப்பதற்கு எவ்வளவோ பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்வினியின் மாமனார், மாமியார் அவருக்கு போன் செய்து மிகவும் மோசமாக தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். மேலும் நீயெல்லாம் உயிரோட வாழவேண்டுமா எனவும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அஸ்வினி தனது தற்கொலைக்கு மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்தான் காரணம் என எழுதிவைத்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து கணவர் உட்பட 4 பேருக்கு அனுப்பிவிட்டு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் எழுந்துபோது தாய் தூங்கில் தொங்குவதை கண்டு அலறியுள்ளனர். அதனை தொடர்ந்து அஸ்வினியின் பெற்றோர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மகள் எழுதி வைத்திருந்த கடிதத்தை கண்ட பெற்றோர்கள் அஸ்வினியின் மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் உறுதியளித்த பின் அஸ்வினியின் உடலை பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.