×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செய்வினை எடுப்பதற்காக நள்ளிரவில் சாமியாரை வீட்டிற்கு அழைத்த பெண் .! அடுத்தடுத்து செய்த அதிர்ச்சி காரியம்!!

girl complaint police about fraud persons

Advertisement

கிருஷ்ணகிரியில் வசித்து வருபவர் பழனியம்மாள். இவரது வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாமியார் என கூறி நபர் ஒருவர் வந்துள்ளார். இவர் பழனியம்மாவிற்கு எதிர்காலம் குறித்து அருள்வாக்கு கூறியுள்ளார். மேலும் உங்களது வீட்டு தோட்டத்தில் புதையல் ஒன்று உள்ளது எனவும், அதனை நீங்கள் எடுக்க கூடாது என்பதற்காக உங்கள் வீட்டில் யாரோ செய்வினை செய்து வைத்துள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் செய்வினையை நீங்கள் எடுக்கவில்லை என்றால் உங்கள் மகனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என அந்த நபர் பழனியம்மாளிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் அவரை நம்பி உடனே செய்வினையை எடுக்கும்படி கேட்டுள்ளார். இந்நிலையில் அந்நபர் செய்வினை எடுப்பதற்காக 10ஆயிரம், 50 ஆயிரம் 45 ஆயிரம் என மூன்று தவணையாக பணம் பறித்துள்ளார்.

இந்நிலையில் தனியே செய்வினை எடுக்க முடியாது மேலும் இருவர்  துணைக்கு வேண்டும் என கூறி ஐம்பதாயிரம் பணத்தை கேட்டுள்ளார் இந்நிலையில் அவர் மீது சந்தேகம் அடைந்த பழனியம்மாள் நீங்கள் செய்வினையை எடுத்தால்தான் பணம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு செய்வினை எடுப்பதாக சுரேஷ், செந்தில்குமார், சிவா என்ற மூன்று நபர்கள் பழனியம்மாள் வீட்டிற்கு வந்துள்ளனர் அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#money #fraud
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story