நள்ளிரவில் கடலில் திருமணநாள் கொண்டாட்டம்! இளம் தம்பதியினருக்கு கண்ணிமைக்கும் நொடியில் காத்திருந்த பெரும்சோகம்!
girl dead by struggling seawaves while wedding day celebration
வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் வசித்து வருபவர் வினி சைலா. இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு இரண்டாவது திருமண நாள் என்பதால் அதனை கொண்டாட சைலா தனது குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் சரியாக இரவு 12 மணியளவில் பாலவாக்கம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் அதிகமான பேர் இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவதாக கடலுக்கு அருகே சென்றுள்ளனர்.
மேலும் வினி சைலாவும், விக்னேஸ்வரனும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி மோதிரம் மாற்றிக் கொள்ள முயர்ந்துள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலை சைலாவை அடித்து கொண்டு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் கதறித் துடித்தபடியே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் போலீசார்கள் மீனவர்களின் உதவியுடன் வினி சைலாவை தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனைத்தொடர்ந்து நேற்று காலை வினி சைலாவின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமண நாளை கொண்டாட ஆசையாக வந்த தம்பதியினருக்கு நேர்ந்த சோகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.