இந்த அழகிய ஜோடிக்கு இப்படியொரு சோகமா? திருமணமான ஒரு மாதத்தில் நேர்ந்த விபரீதம்! நம்பிக்கையுடன் காத்திருக்கும் கணவர்!
girl got accident and loss memory after marriage
ஈரோட்டைச் சேர்ந்தவர் அருண். அவர் சீனாவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த சுதா என்ற பட்டதாரி பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்து சீனாவிற்கு திரும்பிய அருண், அங்கு வீடு பார்த்துவிட்டு, தனது மனைவியை அழைத்துச்செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
ஆனால் சீனா செல்லவிருந்த இரு தினங்களுக்கு முன் தனது சகோதருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சுதா, திடீரென தவறிவிழுந்துள்ளார். இதில் அவரது பின் தலையில் கடுமையாக அடிபட்டுள்ளது. மேலும் அப்பொழுது இதனை கண்ட டிராபிக் போலீசார் ஒருவர் உடனே சுதாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே சுதா சுயநினைவை இழந்தார்.
அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சுதாவிற்கு மூளையில் ஆப்ரேஷன் செய்து உயிரைக் காப்பாற்றினர். பின்னர் 9 நாட்கள் கழித்து சுதா கண்விழித்தார். ஆனால் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரது கணவர் அருண் கடந்த 3 மாதங்களாக வேலையை விட்டுவிட்டு மனைவியின் அருகிலிருந்து கவனித்து வருகிறார். மேலும் அருண் சுதா என்று அழைத்தால் மட்டும் அவர் திரும்பி பார்க்கிறார் எனவும், தனது மனைவி விரைவில் குணமாகிவிடுவார் எனவும் அருண் பெரும் நம்பிக்கையில் உள்ளார்.