×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிக்கடி உல்லாசமாக இருப்போம்! அப்பொழுதுதான்.. அடுக்கடுக்காக பல ரகசியங்களை உடைத்து இளைஞன் அளித்த வாக்குமூலத்தால் பேரதிர்ச்சி!!

girl killed by illegal lover

Advertisement

திருச்சி சமயபுரம் அருகில் உள்ள நரசிங்க மங்கலத்தைச் சேர்ந்தவர் சிவரெத்தினம். இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை கடுக்காய்குறிச்சி கிராமத்தில் வசித்து வந்த ரெங்கசாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவரெத்தினம் கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

அதனை தொடர்ந்து தனது மகனை பெற்றோர்களுடன் விட்டுவிட்டு சிவரெத்தினம் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். பின்னர் திருப்பூரிலேயே தங்கியிருந்த அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து தனது பெற்றோர் மற்றும் மகனையும் பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மகனை பார்ப்பதற்கு சிவரெத்தினம் வரவில்லை.

         

இதனால் பதறிய குடும்பத்தினர் இதுகுறித்து அவர் பணியாற்றிய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் விசாரித்தபோது அவர்கள் வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பல இடங்களில் தேடியும் சிவரெத்தினம் கிடைக்காத நிலையில் அவர்கள் சமயபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் எண் மூலம் சிவரெத்தினத்திற்கு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை  என்பவருடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். 

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் தான்தான் சிவரத்தினத்தை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார் மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் நானும் சிவாவும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவள் என்னை விட மூன்று வயது பெரியவள். எங்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் முதலில் சிவா காதலை ஏற்க மறுத்தார் ஆனால் நாளடைவில் காதலை ஏற்றுக்கொண்டார்.

 பின்னர் அடிக்கடி திருவண்ணாமலையில் உள்ள எனது வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருப்போம். அவரிடம் நான் அடிக்கடி செலவுக்கு பணம் வாங்குவேன். அவ்வாறு கடைசியாக எனது வீட்டிற்கு சென்றபோது நான் சிவாவிடம் பணம் கேட்டேன் ஆனால் அவர் இல்லை என்று கூறினார். இதில் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் கோபத்தில் அவளை நான் அடித்தேன்.  பின்னர் மயங்கி விழுந்த சிவாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதனை தொடர்ந்து  சிவாவின் உடலை தண்டராம்பட்டு அருகிலுள்ள பச்ச குப்பம் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் வீசினேன் என அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal love #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story