கறாராக தந்தை கூறிய ஒற்றை வார்த்தை! வெளிநாட்டிலிருந்து வந்த மகள் எடுத்த திடீர்முடிவு! கதறித் துடிக்கும் குடும்பத்தினர்!
girl suicide for father did not give permisission
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பிரியா 24 வயது நிறைந்த அவர் துபாயில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் பிரியாவுடன் வேலை பார்த்து வந்த பெண் ஒருவரின் தந்தை இறந்துவிட்டார்.அவர் சென்னையை சேர்ந்தவர்.மேலும் பிரியாவின் நெருங்கிய தோழி. இந்நிலையில் தோழியின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எண்ணிய பிரியா இதுகுறித்து தனது அப்பாவிடம் கூறி அனுமதி கேட்டுள்ளார். ஆனால் ப்ரியா எவ்வளவோ கெஞ்சியும், அவரது தந்தை இவ்வளவு தூரம் தனியாக போக வேண்டாம் என்று கறாராக மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த பிரியா வீட்டில் உருளைக்கிழங்கு தோட்டத்திற்கு அடிப்பதற்காக வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார் பின்னர் வாயில் நுரை தள்ளி பிரியா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.