4 விதமாக பேசிய அக்கம் பக்கம்.. "நான் நல்லவ" கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த இளம்பெண்..! நெஞ்சை உலுக்கும் சோகம்.!!
4 விதமாக பேசிய அக்கம் பக்கம்.. நான் நல்லவ கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த இளம்பெண்..! நெஞ்சை உலுக்கும் சோகம்.!!
தனது காதலைப்பற்றி இழிவாகவும், அவதூறாகவும் பேசியதால் மனவிரக்தியடைந்த பெண், தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தால் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகம் நிலவிவருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை அடுத்த கரடு பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜி-செல்லம்மாள் தம்பதியினர். இவர்கள் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அஞ்சலை என்ற 19 வயதுடைய ஒரு மகள் இருந்துள்ளார்.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்த அஞ்சலை, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக இருவீட்டாருக்கும் தெரியவர முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் அந்த பெண்ணின் காதல் குறித்து அக்கம்பக்கத்தினர் இழிவாகவும், அவதூறாகவும் பேசியதால் மனவிரக்தியடைந்த அவர் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார்.
மேலும், தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதிவைத்து விட்டு அருகாமையில் இருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்குறிப்பில், "தான் எவ்விதமான தவறும் செய்யவில்லை எனவும், தான் மிகவும் நல்லவள் என்று கூறி உருக்கமாக எழுதியுள்ளார். அத்துடன் என்னுடைய சூர்யாவிற்கும், இதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இதனை காரணம் காட்டி, அவனை எதுவும் செய்து விடாதீர்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஞ்சலையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவமானது அஞ்சலையின் பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்களிளை பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.