இனி முகூர்த்த நாள் ஆரம்பம்.! இன்றிலிருந்தே அதிகரிக்க துவங்கிய தங்கம் விலை.!
இனி முகூர்த்த நாள் ஆரம்பம்.! இன்றிலிருந்தே அதிகரிக்க துவங்கிய தங்கம் விலை.!
கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கிய நாட்கள் முதல் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனாலும் சமீப நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் இருந்துவருகிறது.
ஆடி மாதத்தில் முகூர்த்த நாள் அதிகமாக இல்லாததால் தங்கத்தின் தேவை குறைந்து இருந்தது. அடுத்த மாதம் ஆவணியில் அதிகப்படியான முகூர்த்த தினங்கள் உள்ளதால் இன்றிலிருந்தே தங்கம் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ4,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.