மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை மேலும் சரிவு..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
கொரோனா பரவல் அதிகரித்ததில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. அதற்க்கு கார
கொரோனா பரவல் அதிகரித்ததில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. அதற்க்கு காரணம் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது.
இருப்பினும் அவ்வப்போது சற்று ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலையானது இருந்துவந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,432 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,456 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,791 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 38,328 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை 1 கிலோக்கு 900 குறைந்து, ஒரு கிராம் ரூ. 74.60 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.74,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.