இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை அதிரடி குறைவு.!
gold rate reduced
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வந்தது. கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4755 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38040க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 3.30 பைசா குறைந்து 60.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.