கோவில் தோட்டத்தில் குழி தோண்டியபோது கேட்ட வினோத சத்தம்..! சற்று நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
Golden treasure found in trichy temple
திருச்சியில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உள்ள தோட்டத்தில் குழி தோண்டியபோது தங்க புதையல் கிடைத்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி சிவன் தளங்களில் மிகவும் பிரசிதிப்பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தியா மட்டும் இல்லாது, வெளிநாடுளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான தோட்டத்தை கோவில் ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளனர். அப்போது, குழி ஒன்றை தோண்டிய ஊழியர்கள் குழி உள்ளே இருந்து வித்தியாசமாக சத்தம் வருவதை கேட்டுள்ளனர்.
உடனே குழியை மேலும் ஆழமாக தோண்டிய நிலையில் பழமையான உண்டியல் வடிவ செப்பு பாத்திரம் ஒன்று இருந்துள்ளது. அந்தத் செப்பு பாத்திரத்தில் ஏராளமான பழங்காலத்து தங்க நாணயங்கள் இருந்துள்ளது. சுமார் 1715 கிலோ கிராம் எடை கொண்ட 505 பழங்கால தங்க நாணயங்கள் அந்த செப்பு பாத்திரத்தில் இருந்துள்ளது.
இதன் தற்போதைய மதிப்பு சுமார் 61 லட்சம் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நாணயங்கள் எந்த காலத்தை சேர்ந்த நாணயம் என்பதை ஆராய தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.