ராணுவ வீரர் இறந்து போனதாக துக்கத்தில் மூழ்கிய மொத்த குடும்பம்! திடீரென வந்த போன்! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
Good news for army man family
இந்தியா - சீனா எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன இராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவத்தாக்குதலில் இறந்து போனதாக கருதப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் அவரது வீட்டிற்கு போன் செய்து தான் உயிருடன் இருப்பதை தெரிவித்து இருக்கிறார். பீஹார் மாநிலம் சரண் மாவட்டம் திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுனில். இவர் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த தாக்குதலில் இவர் இறந்ததாக கூறப்பட்டிருந்தது.
ஆனால், வேறு சிப்பாய்க்கு பதிலாக இவரது பெயர் தவறாக இடம்பெற்றுவிட்டதாகவும், ஆகவே இவர் உயிர்த்தியாகம் செய்துவிட்டதாக தவறான செய்தி வெளியாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. சுனில் இறந்துவிட்டார் என செய்தி வந்ததால் அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் இருந்தனர்.
இந்தநிலையில், சுனிலிடம் இருந்து அவரது மனைவி மேனகா தேவிக்கு போன் வந்துள்ளது. தொலைபேசியில் அவரது கணவரின் குரலை கேட்ட பிறகு பெரும் நிம்மதி அடைந்துள்ளார் சுனிலின் மனைவி.