பெரும் சோகம்.. உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!
பெரும் சோகம்.. உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது நேர்ந்த விபரீதம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!
வந்தவாசி சவேரியார் பாளையத்தில் வசித்து வருபவர் குப்பன். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் டயர் பஞ்சர் பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதேபோல் சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில் வசித்து வருபவர் நாகப்பன். இவருக்கு நாகராஜ் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் வந்தவாசி சவேரியார் பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்,
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்து ராஜேஷ், மணிகண்டன், சாமிநாதன் மற்றும் நாகராஜ் ஆகியோருடன் சேர்ந்து மீன் பிடிப்பதற்காக பாதிரி ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி மற்றும் நாகராஜ் ஆகியோர் ஏரியில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து இவர்களது அலரல் சத்தம் கேட்டு அங்கு இருந்த நண்பர்களும், பொதுமக்களும் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நாகராஜ் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வந்தவாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் மூழ்கியவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.