#Breaking: கிண்டி மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின்.!
#Breaking: கிண்டி மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின்.!
புற்றுநோய்த்துறை மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில், இளைஞருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி மீது, கடந்த நவ.11ம் தேதி விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தில், இளைஞரின் தாய்க்கு மருத்துவர் பாலாஜி உரிய சிகிச்சை அளிக்காமல், தனியார் மருத்துவமனைக்கு செல்லவைத்து, பின் இழுத்தடித்து இருந்ததால் ஆத்திரமடைந்த விக்னேஷ் மருத்துவரின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இணையங்களில் விவாதம்
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர் பாலாஜி, தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆலோசகராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்பட்டு, இளைஞரின் தாயாருக்கு சிகிச்சை அளிக்கக்கூறி ஒருசிலர் தங்களின் வாதத்தையும் முன்வைத்து இருந்தனர். இதுதொடர்பான விவாதங்கள் இணையதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இளைஞருக்கு ஜாமின் வேண்டி விண்ணப்பிக்கப்பட்ட போதிலும், அவை மறுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்; இளைஞருக்கு ஜாமின் மறுப்பு.. நீதிமன்றம் உத்தரவு.!
மருத்துவரின் மீது வழக்குப்பதிவு செய்யலையா?
இந்நிலையில், இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் இளைஞர் விக்னேஷ் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கப்பட்டது. மருத்துவரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இளைஞர் அளித்த புகாரின் பேரில் மருத்துவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கேள்வி எழுப்பினார்.
நிபந்தனை ஜாமின்
காவல்துறை தரப்பில் விக்னேஷுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், நீதிபதியின் கேள்விக்கு அரசுத்தரப்பு பதில் அளிக்க மறுத்துவிட்ட காரணத்தால், வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் மறுஉத்தரவு வரும் வரை தினம் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!