உஷாரா இருங்க.. இன்று 2 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!
உஷாரா இருங்க.. இன்று 2 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!
மேற்குத்திசை வேகமாறுபாட்டின் காரணமாக இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்யவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக இன்று "தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை தெரிவித்துள்ளது. 6 ஆம் தேதியான இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது".
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அதிகபட்ச வெப்பநிலையானது 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 26 - 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, "மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும். மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல், வடக்கு கர்நாடகா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.