தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிவர் புயலாக மாறி நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது கனமழையுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயல் நாளை கடக்கவுள்ள நிலையில் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
சென்னையில் நள்ளிரவில் இருந்து விடிய விடிய மழை பெய்துவந்த நிலையில், காலையில் சற்று மழை நின்றது. தற்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை சென்னையில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புயலின் தீவிரத்தை பொறுத்து 7 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.