×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குமரியில் கொந்தளிக்கும் கடல்! உயர உயர எழும் கடல் அலைகள்! சுனாமி எச்சரிக்கையா?

Heavy sea waves Sunami symptoms in kanyakumari

Advertisement

கடல் சீற்றம் என்றாலே எல்லோருக்கும் சுனாமிதான் நினைவுக்கு வரும். ஏனெனில் சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகள் இன்றுவரை யாராலும் மறக்க முடியாத அளவிற்கு சோகத்தை ஏற்படுத்தியது. சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதும், அதனால் பல மக்கள் வீடு வாசல் இழந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கன்யாகுமரியில் கடல் பயங்கர சீற்றமாக காணப்படுகிறது. கடல் அலைகள் மிகப்பெரும் உயரத்திற்கு எழுகிறது. இந்த மாதம் ஆரம்பித்த நாளிலிருந்தே கடல் சீற்றமாகத்தான் உள்ளது. ஆனால் கடந்த 2 நாளாக இது இன்னும் அதிகரிகத்துள்ளது.

இதனால் கடற்கரை ஓரத்தில் இருக்கும் மக்களை எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அஞ்சுகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் கடலின் சீற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

கடல் அலைகள் கரை பகுதிக்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகளை கடலுக்குள் இழுத்து சென்றுள்ளது. கிட்டத்தட்ட 12 படகுகளுக்கு மேல் காணாமல் போய்விட்டதாக மீனவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். மேலும் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் ஒன்றுடன் ஓன்று மோதி படும் சேதமடைந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sunami #kanyakumari
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story