எச்சரிக்கை! தமிழகத்தில் பொங்கல் வரை கடும் குளிர் நிலவும் - தமிழ்நாடு வெதர்மேன்
Hevay cold climate contnue till pongal in tn
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பொங்கல் வரை கடும் குளிர் நிலவும் எனவும் ஊட்டி, கொடைக்கானலை விட ஒசூர் பகுதியில் அதிகமான குளிர் நிலவும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் பொழியும் பனி காரணமாக தமிழகத்தில் இரவு நேரங்களில் குளிரான வாணிலை நிலவுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் பகல் நேரங்களிலும் குளிர் அதிகமாகவே உள்ளது. கோடை காலங்களில் ஊட்டி, கொடைக்கானலில் நிலவும் குளிர் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இப்போது நிலவி வருகிறது. இந்த மோசமான குளிரால் பகல் நேரங்களில் கூட வாகனங்களில் செல்ல முடியவில்லை.
இந்த மோசமான வாணிலை வரும் பொங்கல் வரை நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் நிலவும் குளிரை விட ஒசூரில் நிலவும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தின் உள் மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான குளிர் நிலவுமாம்.
ஒசூரில் வெப்பநிலை ஊட்டி, கொடைக்கானலை விட குறைவாக 7°C ஆக இருக்கும். தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3.5°C அளவில் குளிர் நிலவும். மேலும் பெங்களூரு, மைசூரிலும் தமிழகத்திற்கு ஈடான குளிர் நிலவும்.
அந்தமானில் உருவாகியுள்ள புயலால் தமிழகத்தில் ஒரு சொட்டு மழை கூட கிடைக்க வாய்ப்பில்லை என்பது பரிதாபமான செய்தி. அதே நேரத்தில் டெல்லி மற்றும் பிற வட மாநிலங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.