மதுபானத்தை பாட்டிலில் விற்கும் போது, பாலை பாட்டிலில் விற்க முடியாதா? தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நிதிமன்றம்!!
மதுபானத்தை பாட்டிலில் விற்கும் போது, பாலை பாட்டிலில் விற்க முடியாதா? தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நிதிமன்றம்!!
ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க வேண்டும் என்ற வழக்கில் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம். மதுபானங்களை பாட்டிலில் அடைத்து விற்கும் தமிழ்நாட்டு அரசால் ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியாதா? என்று தமிழ்நாட்டு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் மது அருந்திவிட்டு போதையில் பாட்டிலை கவனமாக கையாளுகிறார்கள். அப்படி இருக்கும்போது சுயநினைவுடன் இருக்கும் மக்களால் கண்ணாடி பாட்டிலை கையாள முடியாதா? என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து ஆவின் நிறுவனம் கூறுகையில், பால் விநியோகத்தை பாட்டிலுக்கு மாற்றலாமா என்று பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.