×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஷாக்கிங்... ஹாலிவுட் படம் பாணியில் ஏடிஎம் கொள்ளை.!! 61 கிலோ மீட்டர் துரத்திச் சென்ற போலீஸ்.!!

ஷாக்கிங்... ஹாலிவுட் படம் பாணியில் ஏடிஎம் கொள்ளை.!! 61 கிலோ மீட்டர் துரத்திச் சென்ற போலீஸ்.!!

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹாலிவுட் பட பாணியில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் பணம் மற்றும் ஏடிஎம் இயந்திரம் மீட்கப்பட்ட போதும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள தரூர் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை  மர்மகும்பல்  கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி ஏடிஎம் நிலையத்திற்கு வந்த அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை ஹாலிவுட் படம் பாணியில் கயிறு கட்டி தங்களது வாகனத்தின் மூலம் இழுத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் சுமார் 61 கிலோமீட்டர் தூரம் கொள்ளையர்களை துரத்திச் சென்று ஏடிஎம் இயந்திரம் மற்றும் அதிலிருந்து 24 லட்ச ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர். எனினும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர் 4 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிடிக்காத ஹெர் ஸ்டைல் காரணமாக சோகம்; 9 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை.!

மேலும் அவர்களை கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் காட்சிகளில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை தங்கள் கார் மூலம் கயிறு கட்டி இழுத்துச் செல்வது பதிவாகி இருக்கிறது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்திக்கிறார் அண்ணாமலை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #maharastra #ATM Theft #Police Chase #24 Lakhs
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story