கோர விபத்து.. லாரியினுள் சொருகி நின்ற ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பலியான 2 டிரைவர்கள்.. பரபரப்பு சம்பவம்.!
கோர விபத்து.. லாரியினுள் சொருகி நின்ற ஆம்னி பேருந்து.. சம்பவ இடத்திலேயே பலியான 2 டிரைவர்கள்.. பரபரப்பு சம்பவம்.!
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் பயணிகளை ஏற்றுக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகமாக வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்துள்ளது.
இதனால் இந்த பேருந்தானது சென்டர் மீடியனில் மோதி தடுப்புகளை உடைத்துக் கொண்டு நான்கு வழிச்சாலையில் எதிர் திசையை நோக்கி சென்றுள்ளது. அப்போது அதே நேரத்தில் எதிர் திசையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி மீது ஆம்னி பேருந்தானது அதிவேகமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் ஆம்னி பேருந்து மற்றும் லாரி ஆகியவை அப்பளம் போல் நொறுங்கியது.
மேலும் இந்த பயங்கர விபத்தில் டிரைவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான நிலையில் பேருந்தில் பயணம் செய்த 20ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்து ஏற்ப்படுத்திய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.