முதலாளி உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த வேலைக்காரி!!
House keeping blackmail to owner
சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் குமார். இவர் தன் குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு வள்ளி என்ற பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்தநிலையில் வள்ளி அந்த வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குமாரின் மனைவி கோடைவிடுமுறைக்காக குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது குமாருக்கும், வள்ளிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் வள்ளியை தேடி ஜீவா என்பவர் குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வள்ளியுடன், குமார் நெருக்கமாக இருப்பதை அறிந்து, அவரை மிரட்டி அவரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2.20 லட்சம் பணத்திற்கான காசோலையை கேட்டு வள்ளியை உடன் அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின் மீண்டும் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட வள்ளி, உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்தவுடன், இரண்டு பேரும் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்துள்ளதாகவும், பணம் தரவில்லை என்றால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
அதன் பின்னரே குமாருக்கு வள்ளி இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக குமார் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.