அடேங்கப்பா! டோல்கேட் மூலம் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? மத்திய அமைச்சகம் விளக்கம்!
How much collection from tamilnadu tollgates
நாட்டில் நெடுஞ்சாலைகளை விரிவு படுத்தும் பொருட்டு முக்கியமான நகரங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பயனாளிகள் எளிதாகவும், விரைவாகவும் தங்களது இலக்கை அடைய உதவுகிறது.
இதில் குறிப்பிட்ட சில தூரங்களுக்கு இடையே டோல்கேட் எனப்படும் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தேசிய நெடுஞ்சாலைகளை உபயோகப்படுத்துவதற்கான கட்டணங்களை வசூலிக்கும் இந்த இடம்தான் சுங்க சாவடி.
இந்நிலையில் தமிழகத்தில் சுங்கச்சாவடி மூலம் ரூ.9 ஆயிரத்து 800 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் கூடிய சுங்கச் சாவடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் வசூல் செய்யப்பட்ட தொகை குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதிமுக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் மன்சுக்லால் மான்வியா பதிலளித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் கூடிய சுங்கச் சாவடிகளில் 9 ஆயிரத்து 842 கோடியே 30 லட்சம் ரூபாய் வசூலாகியிருப்பதாக தெரிவித்தார்.