சுவையான கடலைப்பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?. அசத்தல் டிப்ஸ்.!
சுவையான கடலைப்பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?. அசத்தல் டிப்ஸ்.!
மாறுபட்ட சுவை கொண்ட புளிக்குழம்பு செய்ய ஆசைப்படுவோர், உருண்டைக்குழம்பு செய்து அசத்தலாம். இதன் சுவை அசத்தலாக இருக்கும், சிறார்களும்-பெரியவர்களும் ருசித்து சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
கடுகு - அரை கரண்டி,
சீரகம் - அரை கரண்டி,
வெந்தயம் - கால் கரண்டி,
வெங்காயம் - 4,
தக்காளி - 4,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
புளி - சிறிதளவு,
குழம்பு மிளகாய் தூள் - 3 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய் துருவல் - 1 கப்,
சோம்பு - 1 கரண்டி,
இதையும் படிங்க: கோக்கில் கிடந்தது என்ன? சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. உயிர் பயத்தில் இளைஞர்.!
உருண்டைக்கு
கடலை பருப்பு - 4 கரண்டி,
பாசிப்பருப்பு - 1 கரண்டி,
இஞ்சி - அரை இன்ச் அளவு,
சோம்பு - 1 கரண்டி,
முருங்கை அல்லது கறிவேப்பில்லை - சிறிதளவு,
வெங்காயம் - 2,
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை 4 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சி, சோம்பு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்புடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின் இவற்றுடன் முருங்கை அல்லது கறிவேப்பில்லை, 2 வெங்காயம் நறுக்கி சேர்த்து பிசைந்து சிறிய பந்துகளை போல உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். வெங்காயம்-தக்காளி வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்துவிடவும்.
நன்கு கொதிவந்ததும் தேங்காய், சோம்பு ஆகியவற்றை அரைத்து விழுதாக்கி சேர்த்து கொதிக்கவிடவேண்டும். பச்சை வாசனை குழம்பில் இருந்து போனதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து தயாரித்து வைத்துள்ள கடலை உருண்டைகளை ஒவ்வொன்றாக கரண்டி கொண்டு மெதுவாக குழம்பி சேர்க்கவும். உருண்டை வெந்ததும் மேலே மிதக்கத் தொடங்கும். பின் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறலாம்.
ஒரேயொரு உருண்டையை மட்டும் சிறிதளவு நீரில் கரைத்து குழம்புடன் சேர்த்துக்கொள்ளவும்.
இதையும் படிங்க: ஜல்லிக்கற்கள் வீசி; மாநில கல்லூரி, பச்சையப்பாஸ் மாணவர்களுக்கு இரயில்வே டிஎஸ்பி எச்சரிக்கை.!